கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வேலந்தாவளம் அருகே நடைபெற்ற வாகன சோதனையில் பெரும் தொகை ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் டி.எஸ்.பி. அப்துல் முனீர் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் தமிழக எல்லை பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது கோவையிலிருந்து பாலக்காடு நோக்கி வந்த காரை தடுத்து சோதனையிட்டபோது, அதன் சீட்டின் அடியில் ரகசிய அறை அமைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 500 ரூபாய் நோட்டுகள் கத்தாக கத்தாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மொத்தம் ரூ.1 கோடியே 31 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

காரை ஓட்டி வந்த மலப்புரம் மாவட்டம் ராமபுரத்தைச் சேர்ந்த சுபி (47) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஹவாலா முறையில் பணத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பணத்தை பறிமுதல் செய்து, சுபியை கைது செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!