விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. காதலர்களாக இருந்த 10ம் வகுப்பு மாணவியும், பிளஸ்-2 மாணவனும் வீட்டில் தெரியாமல் சென்னை சென்றுவிட்டு பைக்கில் திரும்பியபோது, பிரம்மதேசம் காவல் நிலைய போலீஸ்காரர் இளங்கோ அவர்களை வழிமறித்து விசாரித்துள்ளார்.
பின்னர் மாணவனை அனுப்பிவிட்டு, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த மாணவி அங்கிருந்து தப்பித்து, மீண்டும் மாணவனுடன் சேர்ந்து வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் சம்பவத்தை தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீஸ்காரர் இளங்கோ கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, எஸ்.பி. சரவணன் நேற்று உத்தரவிட்டு இளங்கோவை பணியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!