திரையரங்குகளில் 75 நாட்களைக் கடந்தது லோகா சாப்டர் 1… படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு!
TV9 Tamil News November 11, 2025 02:48 AM

சூப்பர் ஹீரோ கதைகளை மையமாக வைத்து பொதுவாக அதிக அளவில் ஹாலிவுட்டில் தான் படங்கள் வெளியாவது வழக்கம். தொடர்ந்து ஹாலிவுட்டில் வெளியாகும் சூப்பர் ஹீரோ கதைகளுக்கு உலகம் முழுவது ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவில் ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோ படங்களுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் மலையாள சினிமாவில் தற்போது தொடர்ந்து சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் முன்னதாக இயக்குநரும் நடிகருமான பேசில் ஜோசஃப் இயக்கத்தில் வெளியான மின்னல் முரளி என்ற படம் சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து வெளியாகி இருந்தது. இந்தப் படம் கொரோனா காலத்தில் வெளியானதால் நேரடியாக ஓடிடியில் வெளியானது. ஆனால் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகி இருந்தால் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்று இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் இரண்டாவதாக சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியான படம் லோகா சாப்டர் 1 சந்திரா. இயக்குநர் டாம்னிக் அருண் எழுதி இயக்கி இருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து உருவான கதை 5 பாகங்களாக வெளியாகும் என்று படக்குழு முன்னதாகவே அறிவித்து இருந்தது. மேலும் அடுத்ததாக இரண்டாவது பாகத்தில் டொவினோ தாமஸ் முன்னணி வேடத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

75 நாட்களைக் கடந்தது லோகா சாப்டர் 1 சந்திரா:

ஒரு பெண் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்து மலையாள சினிமாவில் வெளியான இந்த லோகா சாப்டர் 1 சந்திரா படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் மலையாள சினிமாவில் வசூலில் சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 75 நாட்களைக் கடந்துள்ளதைப் படக்குழு மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளது.

Also Read… அஜித் குமார் நடிப்பில் வெளியான வேதாளம் படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது

லோகா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Running unstoppable at Dubai Vox Cinemas for 75 days! Book your tickets now! 🍿👏
https://t.co/eEqUt7g57p#Lokah #TheyLiveAmongUs@DQsWayfarerFilm @dulQuer @dominicarun@NimishRavi@kalyanipriyan@naslen__ @jakes_bejoy @chamanchakko @iamSandy_Off @santhybee @AKunjamma pic.twitter.com/tGaWjgnGaR

— Wayfarer Films (@DQsWayfarerFilm)

Also Read… வெற்றிநடைபோடும் பைசன் காளமாடன் படம் – கொண்டாட்டத்தில் படக்குழு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.