கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே சுவர் இடிந்ததில் இரு சிறுவர்கள் பலியான துயரச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. கருவாரா பகுதியைச் சேர்ந்த அஜய்–தேவி தம்பதியரின் மகன்கள் ஆதிஅஜய் (7) மற்றும் அஜினேஷ் அஜய் (4) ஆகியோர் முறையே 2ம் வகுப்பு மற்றும் எல்.கே.ஜி.யில் பயின்று வந்தனர்.

நேற்று முன்தினம், தங்கள் தங்கை மகனுடன் சேர்ந்து வீட்டின் மேல்தளத்தில் உள்ள சன் ஷைடில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தபோது சுவர் இடிந்து விழுந்தது. அதில் சிக்கிய இரு சிறுவர்களும் கடுமையாக காயமடைந்தனர். குடும்பத்தினர் அவசரமாக அவர்களை கோட்டத்தரை தாலுகா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், இரு சிறுவர்களும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சுவர் இடிந்து சகோதரர்கள் பலியான இந்த சம்பவம் அட்டப்பாடி முழுவதும் துயரநிலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!