சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 வரை மின்னல் உயர்வு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.880 உயர்ந்திருந்த நிலையில், மாலையில் இரண்டாவது முறையாக மேலும் ரூ.520 அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக ரூ.1,440 உயர்ந்துள்ளது.
:இந்த உயர்வினால், சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.11,480-க்கும், ஒரு சவரன் ரூ.91,840-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை உயர்வை போலவே, வெள்ளியின் விலையும் இன்று காலை ரூ.2 உயர்ந்த நிலையில், மாலையிலும் மீண்டும் ரூ.2 உயர்ந்துள்ளது. இதன்மூலம், ஒரு கிராம் வெள்ளி ரூ.169-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Edited by Mahendran