தேனி மாவட்டம் அரண்மனை புதூர் அருகே உள்ள விளக்கு மேம்பாலம் பகுதியில் பத்ரகாளி என்ற மூதாட்டி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். வழக்கம் போல இன்று காலையில் அவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக ரயில் தண்டவாளம் அருகே அழைத்துச் சென்றார்.

அப்போது திடீரென அந்த வழியாக வந்த சோதனை ரயில் என்ஜின் மூதாட்டி மீது மோதியது. கடுமையாக தாக்கப்பட்ட பத்ரகாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் அவர் மேய்த்துக் கொண்டிருந்த 19 ஆடுகளும் அதே இடத்தில் உயிரிழந்தன.
தகவல் அறிந்து வந்த போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஒரே நேரத்தில் மூதாட்டி மற்றும் 19 ஆடுகள் என 20 உயிர்கள் பறிந்த இந்த துயர சம்பவம், அரண்மனை புதூர் பகுதிமக்களை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!