தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் திம்மாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுவாதி (28), கணவரை பிரிந்து துண்டிகல் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் கிஷனின் அடுக்குமாடி வீட்டில் தனது இளைய மகனுடன் வசித்து வந்தார். கிஷனுக்கும் மனைவி, குழந்தைகள் இருந்தாலும், சுவாதியுடன் நெருக்கம் வளர்ந்து கள்ளக்காதலாக மாறியது.

சமீபத்தில் சுவாதி அந்த குடியிருப்பின் அனைத்து வீடுகளின் வாடகையையும் வசூலித்து செலவு செய்ததால் கிஷனின் குடும்பத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் சுவாதியை அகற்ற கிஷனின் சகோதரி மகன் ராஜேஷ் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம், சுவாதி வீட்டில் மகனுடன் இருந்தபோது, ராஜேஷ் மற்றும் நண்பர் வம்சி திடீரென வீட்டிற்குள் நுழைந்து, சுவாதியின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். சம்பவத்துக்குப் பிறகு ராஜேஷ் போலீசில் சரண் அடைந்தார். தப்பியோடிய வம்சியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொலைச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!