ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன், அணிகள் தங்கள் வீரர்களைத் தக்கவைக்கும் பட்டியலை வழங்கத் தயாராகிவரும் நிலையில், ஏலத்திற்கு முன்பே வீரர்களை மாற்றிக்கொள்ள (Trade) அணிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.
அந்த வகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சனை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி முயற்சி செய்து வருகிறது. சாம்சன் வேண்டுமென்றால், தங்களுக்கு ஜடேஜா, சிவம் துபே மற்றும் டெவால்ட் பிரேவிஸ் ஆகியோரைத் தர வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் கோரியது.

சிஎஸ்கே இதற்கு ஒப்புக்கொள்ளாத நிலையில், ஜடேஜாவுடன் சாம் கரணை கொடுக்க சிஎஸ்கே முன்வந்தது; ஆனால் ராஜஸ்தான் அணி ஜடேஜாவுடன் பதிரனாவை கேட்டது. இதன் மூலம், சாம்சனுக்காக அணியின் தூண்களில் ஒருவரான ஜடேஜாவை விட்டுக் கொடுக்கச் சிஎஸ்கே முடிவு செய்துள்ளது உறுதியாகியுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அணிக்காகப் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்த ஜடேஜாவைச் சிஎஸ்கே விட்டுக்கொடுப்பது ரசிகர்களிடையே வருத்தத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.