ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியாவில் பெரும் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த முயற்சித்ததாக உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து ராணுவம் மற்றும் பயங்கரவாத தடுப்பு படையினர் பல்வேறு மாநிலங்களில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஸ்ரீநகரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய வழக்கில், அனந்த்நாக் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர் அடில் அகமது ராதர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில், பயங்கரவாத வலையமைப்பைச் சேர்ந்த மேலும் பலர் பற்றிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில், ஹரியானா மாநில பரிதாபாத்தில் உள்ள டாக்டர் முஜாமில் ஷகீல் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 360 கிலோ வெடிமருந்துகள், ஏ.கே.47 துப்பாக்கி, கைத்துப்பாக்கிகள், டைமர்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஷகீல் புல்வாமா மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. தற்போது இருவரும் காவலில் இருந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!