தமிழ்நாடு மீனவர்களுக்கு எதிராக இலங்கை கடற்படையின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. எல்லை மீறி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் மீது இன்று இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 9 அன்று, மொத்தம் 29 தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது.

இன்று அவர்கள் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு, 26 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 3 காரைக்கால் மீனவர்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஒரு படகு உரிமையாளருக்கு 6 மாத சிறையும் ரூ.12 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அபராத தொகையை செலுத்தத் தவறினால், கூடுதலாக 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு மீனவர் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி, அவர்களை விடுவிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!