ஈரோடு மாவட்டம் பவானியில் 25 நாட்களுக்கு முன் கடத்தப்பட்ட ஒன்றரை வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதால் மகிழ்ச்சி நிலவுகிறது. சித்தோடு அருகே லட்சுமி நகரில் உள்ள மேம்பாலத்தின் கீழ் ஆந்திராவை சேர்ந்த கூலி தொழிலாளர் வெங்கடேஷ், அவரது மனைவி கீர்த்தனா, மற்றும் மகள் வந்தனா தங்கியிருந்தனர். கடந்த அக்டோபர் 16-ம் தேதி நள்ளிரவில் குழந்தை மர்மமாக மாயமானது.

அன்று குடும்பம் கொசு வலை போர்த்தி தூங்கிக் கொண்டிருந்த நிலையில், காலை எழுந்தபோது குழந்தை காணாமல் போனது. கொசு வலை கத்தியால் கிழிக்கப்பட்டிருந்தது தெரியவந்ததால், கடத்தல் என போலீசார் சந்தேகித்தனர். சம்பவத்துக்குப் பின் சித்தோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, பல சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.
இந்நிலையில், 25 நாட்கள் தேடுதலுக்குப் பின் நாமக்கல்லில் வந்தனாவை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 2 பேரை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தை மீட்பு செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!