நாடு முழுவதும் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முன்னோட்டமாக, தமிழகத்தில் 3 இடங்களில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியுள்ளது.
அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு துல்லியமாக சென்றடைய, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும். கடைசியாக 2011ல் இது நாடு முழுதும் நடைபெற்றது. 2021ல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், கொரோனா தொற்று காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது. மத்திய அரசு சமீபத்தில் அறிவித்ததின்படி, புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027 பிப்ரவரியில் தொடங்க உள்ளது.

அதற்கான ஆயத்தமாக, மாதிரி கணக்கெடுப்பு பணிகள் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்படுகின்றன. தமிழகத்தில் முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சி ஆகிய மூன்று இடங்களில் இன்று கணக்கெடுப்பு பணிகள் தொடங்கின.
இந்த பணியில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். மொத்தம் 34 தகவல்களை சேகரிக்கும் வகையில் கேள்விகள் வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மக்கள் குடும்பத் தகவல்கள், கல்வி நிலை, தொழில், குடியிருப்பு மற்றும் வாழ்க்கைத் தரம் உள்ளிட்ட விவரங்கள் இந்த கணக்கெடுப்பின் மூலம் பதிவாகும்.
மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நவம்பர் 30ஆம் தேதி வரை தொடரும். மக்கள் ஒத்துழைப்புடன் பணி முழுமை பெறும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!