ரஜினி 173 படத்தை யார் இயக்க போகிறார்? ஒரு வேளை பிரதீப் ரெங்கநாதனா இருக்குமோ? இல்ல நெல்சன் தான் மீண்டும் ரஜினி 173 படத்தை இயக்குகிறாரா என்ற பல கேள்விகள் இருந்தன. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ரஜினி 173 படத்தை சுந்தர் சி இயக்க போகிறார் என்ற அறிவிப்பு வெளியாகி அனைவருக்கும் ஒரு பேரதிர்ச்சியாக இருந்தது.
அட இந்த காம்போ சூப்பரா இருக்குமே! ஏற்கனவே ஹிட்டடித்த கூட்டணி. கலகலப்புக்கும் பஞ்சமிருக்காது. ரஜினியின் பழைய ஹீயூமரை மீண்டும் பார்க்கலாம். படமும் கமெர்ஷியலா இருக்குமே என ரசிகர்களும் ஆர்வமாக காத்திருந்தார்கள். ஆனால் அறிவிப்பு வெளியாகி ஒரு வாரத்திலேயே அதாவது நேற்று இந்தப் படத்தில் விலகுவதாக சுந்தர் சி அறிவித்திருந்தார்.
இது மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. அட என்னதான்பா நடந்தது என்று விசாரிக்கும் போது பல தகவல்கள் சொல்லப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் சுந்தர் சி அதிக சம்பளம் கேட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஏனெனில் இதற்கு முன் ரஜினி நடித்த கூலி படத்திற்கு லோகேஷ் கனகராஜுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 50 கோடியாம். ஆனால் இந்தப் படத்திற்கு சுந்தர் சிக்கு பேசப்பட்ட சம்பளம் 10 கோடி என்று சொல்லப்படுகிறது.
ஆனால் சுந்தர் சி பணத்துக்காக இப்படியொரு நல்ல வாய்ப்பை தவறவிடுகிற ஆளும் கிடையாது. அப்போ வேற என்னதான் பிரச்சினை என்று பார்க்கும் போது ரஜினி 173 படத்தை சுந்தர் சி ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எடுக்கிறேன் என்று கூறினாராம். அதாவது படம் முடிந்து எடிட்டிங்கிலிருந்து ரிலீஸாகும் வரை ஃபுல் கண்ட்ரோலும் சுந்தர் சியிடம் தான் இருக்கும். புரோமோஷன் எப்படி நடக்க வேண்டும்? என்னென்ன காட்சிகள் இடம் பெறவேண்டும் உட்பட சுந்தர் சி எண்ணப்படி தான் இருக்கும். இந்த அடிப்படையில் கேட்டாராம்.
ஆனால் படத்தில் நடிக்க போவது ரஜினி. ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டால் ரசிகர்களுக்கு எது பிடிக்கும்? பிடிக்காது? என ரசிகர்களுக்கேற்ப சீனை திட்டமிட சொல்வாராம் ரஜினி. இங்கு ஸ்லோமோஷன் வேண்டும். அங்கு அது இருக்க கூடாது என்றெல்லாம் கூறுவாராம். இது சுந்தர் சிக்கு செட்டாகாது. அதனால்தான் ஃபர்ஸ்ட் காப்பி என்ற ஒரு விஷயத்தை சுந்தர் சி கொண்டு வந்திருக்கிறார். அதற்கு இவர்கள் உடன்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த காரணங்களால்தான் சுந்தர் சி படத்தில் இருந்து விலகியிருப்பார் என்றும் கூறப்படுகிறது.

சரிப்பா. இயக்குனர் மாறினால் மாறட்டும். அந்த இரு ஜாம்பவான்களை மாற்ற வேண்டாம். 44 வருடங்கள் கழித்து இருவரும் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். அதனால் அடுத்து எந்த இயக்குனர் ரஜினி 173 படத்தை இயக்குவார் என்ற ஒரு ஆர்வம் ரசிகர்களிடம் இருந்து வருகிறது. அனைவரும் சொல்வது ஒரு வேளை வெங்கட் பிரபு இந்தப் படத்தை எடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே வெங்கட் பிரபு கால்ஷீட்டை வாங்கி வைத்திருக்கிறார்களாம். வெங்கட் பிரபுவை பொறுத்தவரைக்கும் வித்தியாசமாக அதுவும் மாஸாக படத்தை கொடுக்கிறவர். அவர் ரஜினி 173 படத்தை இயக்கலாம் என்று தெரிகிறது.