பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பீகார் வெற்றியை மகிழ்வுடன் கொண்டாடுகிறோம்.. நம் இபாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம் மரியாதைக்குரிய நிதிஷ்குமார் அவர்களின் ஆட்சிக்கு மறுபடியும் கிடைத்திருக்கும் ஒரு அங்கீகாரம் இந்த பீகார் வெற்றி பல தகவல்களை தமிழகத்திற்கு சொல்கிறது
1. SIR என்பது வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்துவதற்கு தான்.. ஆக அங்கே தேர்தல் ஆணையமே யாரும் மறுவாக்கு பதிவு கேட்கவில்லை தேர்தல் நேர்மையாக நடந்தது என்று எல்லோரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள் மக்கள் யாரும் தனது வாக்குகள் இல்லை என்று போராடவில்லை
ஆக தமிழகத்திலும் இந்த எஸ் ஐ ஆர் வாக்கு பட்டியலை நேர்மைப்படுத்துவதற்காக தான் என்பதை மக்களுக்கு புலப்படுத்துகிறது
2. லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி அவர்களின அவர்களின் பின்னடைவும் ஒரு முதலமைச்சர் வேட்பாளராக அவரை அங்கீகரிக்காததும் வாரிசு அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை என்பதை விட்டு வெளிச்சமாக காண்பிக்கிறது
3. ராகுல் காந்தி சொன்ன வாக்குத் திருட்டு என்பது அப்பட்டமான பொய் என்பதை நிருபித்து இருக்கிறது
4. அங்கே அரசு கொண்டு வந்த பூரண மதுவிலக்கு நாள் பெண்கள் பலனடைந்து இருக்கிறார்கள் அதுவும் மட்டுமல்ல பெண்களுக்கான நல்ல திட்டங்கள் பெண்களை ஊக்கப்படுத்தி இருக்கிறது என்பதற்கு ஆதாரமாக பெண்கள் சப்பாத்து சதவீதம் அதிகமாக வாக்களித்து இருக்கிறார்கள்..
5. மத்திய மாநில அரசுகள் இணைந்தால் ஒரு நல்லாட்சி ஒரு மாநிலத்தில் கொடுக்கும் பொழுது மக்கள் அதனால் பலநடைகிறார்கள் அதனால் மக்கள் ஆதரவு தருகிறார்கள் என்பதை பீகார் நிருபித்திருக்கிறது..
6. புதியவர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்களின் செயல்பாடுகள் மக்கள் சார்ந்த நிரூபிக்கப்பட்டால் மட்டுமே மக்கள் ஆதரவு தருவார்கள் என்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது..
இந்த பீகார் வெற்றி தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கிறது 2026 தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்" என்று தெரிவித்துள்ளார்.