ஜலேபி (Jalebi) என்ன இந்த இனிப்பு?
வெளியே குர்க்குரா, உள்ளே பாகு ஊறிய மெல்லிய இனிப்பு, சூடாக சாப்பிட்டாலோ குளிரவைத்து சாப்பிட்டாலோ துள்ளும் சுவை!
வடஇந்திய street food shops-ல் காலை உணவோடு கூட பூரி + ஜலேபி combo-வாக சாப்பிடப்படும் special dish.
தேவையான பொருட்கள் (Ingredients)
மாவுக்கு:
மைதா – 1 கப்
கார்ன் பிளார் – 1 டேபிள் ஸ்பூன்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை (நிறத்திற்கு)
பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை
தண்ணீர் – தேவைக்கு
பாகுக்கு:
சர்க்கரை – 1 கப்
தண்ணீர் – ½ கப்
எலுமிச்சை சாறு – ½ டீஸ்பூன்
ஏலக்காய் – 2
குங்குமப்பூ – சில துகள் (ஐச்சிகம்)
பொரிக்க:
எண்ணெய் அல்லது நெய்

ஜலேபி செய்வது எப்படி? (Preparation Method)
மாவு தயாரித்தல்
மைதா, கார்ன் பிளார், தயிர், மஞ்சள், பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்கவும்.
தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கொஞ்சம் தளர்வாக பிசையவும்.
இந்த மாவை குறைந்தது 4 மணி நேரம் ஊறவிடுங்கள். (Instant-ஆ இருந்தாலும் 30 நிமிடம் ஊறினால் போதும்.)
சர்க்கரை பாகு
சர்க்கரைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து ஒரு ஒரே தார பாகு சீராக வந்ததும் ஆஃப் செய்யவும்.
அதில் ஏலக்காய், குங்குமப்பூ, எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
பாகு சூடாகவே இருக்க வேண்டும், கெட்டியாக கூடாது.
ஜலேபி வடிவம்
மாவை பிளாஸ்டிக் ஸ்க்வீஸ் பாட்டில் அல்லது ஜலேபி பையில் ஊற்றவும்.
எண்ணெயை மிதமான சூட்டில் வைத்து, சுற்று சுற்றாக ஜலேபி வடிவம் போடவும்.
பொரித்தல்
இரு பக்கமும் பொன்னிறமாக crispy ஆக வரும் வரை பொரிக்கவும்.
பாகில் ஊறவைத்தல்
பொரித்த ஜலேபியை உடனே சூடான பாகில் விடவும்.
30 விநாடிகள் ஊறினதும் எடுத்துவிடலாம் அதிக நேரம் விட்டால் மெதுவாகிவிடும்.