ஜம்மு-காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் திடீரென வெடித்ததில் தடயவியல் நிபுணர்கள், போலீசார் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் நிலவுகிறது.
சமீபத்தில் டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக பரிதாபாத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் 360 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டதுடன், புல்வாமாவைச் சேர்ந்த முகமில் ஷகீல் கனியா கைது செய்யப்பட்டார்.
அப்படி பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் ஆய்வுக்காக நவ்காம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டன. அங்கு தடயவியல் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் சக்திவாய்ந்த முறையில் வெடித்தன. வெடிப்பின் தாக்கத்தில் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்ததுடன், சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவவியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த துயரச் சம்பவம் ஜம்மு-காஷ்மீரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துக்கான காரணங்களை கண்டறிய சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. வெடிபொருட்களின் தன்மை, பாதுகாப்பு நடைமுறைகள், மனிதப் பிழை உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!