''போடி சட்டமன்ற தொகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது.'': ஓ.பன்னீர்செல்வம்..!
Seithipunal Tamil November 15, 2025 01:48 PM

போடி சட்டமன்ற தொகுதியை திமுக கைப்பற்ற வேண்டும் என்ற முதல்வர் மு.க. ஸ்டாலினின் கனவு பலிக்காது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து சென்னை பயணத்திற்காக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று மதியம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளே வெற்றி பெறும் என ஏற்கெனவே பல்வேறு கருத்து கணிப்புகளும் கணித்திருந்தன. தற்போது அது நடந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மேகேதாட்டு அணையை பற்றி விரிவான அறிக்கை குறித்து ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தேன் என்றும், ஆனாலும், அது பற்றி தமிழக அரசு தனியாக ஆய்வு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 2026-இல் போடி சட்டமன்ற தொகுதியை திமுக கைப்பற்றவேண்டும் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.