“நான் ரொம்ப குண்டாக இருக்கிறேன்”… காதலியின் பெற்றோரை கவர அறுவை சிகிச்சை செய்த நபர்… பரிதாபமாக போன உயிர்..!!
SeithiSolai Tamil November 15, 2025 04:48 PM

சீனாவில் காதலித்த ஒரு இளைஞர், தனது காதலியின் பெற்றோரின் மனதைக் கவரத் தீவிர முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், அவர் உயிரை மாய்த்துக் கொண்ட இதயத்தை உலுக்கும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. குறித்த தகவலின்படி, சுமார் 130 கிலோ எடை கொண்ட அந்த இளைஞர், தான் குண்டாக இருப்பதால் காதலியின் பெற்றோர் தன்னை ‘சரியானவர்’ என்று கருதவில்லை என்பதை அறிந்தார்.

இதனையடுத்து, அவர் எப்படியாவது விரைவில் எடையைக் குறைத்து, ‘ஒல்லியாக’ தோன்ற வேண்டும் என்ற வெறியில் மூழ்கினார். இந்த வெறியின் உச்சமாக, அந்த இளைஞர் கேஸ்ட்ரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை என்ற மிகவும் ஆபத்தான முடிவை எடுத்தார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தபோதிலும், விதியின் விளைவால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. உடனடியாக மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவர்கள் தீவிரமாகப் போராடியும், காதலுக்காகத் தன்னையே மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அவரது மோகமும், வெறியும் அந்த அப்பாவிக் காதலனை பயங்கரமான மரணப் படுகுழியில் தள்ளிவிட்டது. காதலை அடைவதற்காக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அவரது இந்தச் சிறுபிள்ளைத்தனமான வெறி, இறுதியில் அவரது கோர மரணத்திற்குக் காரணமாக அமைந்ததுடன், அவரது அனைத்துக் கனவுகளையும் நொடிப்பொழுதில் தவிடு பொடியாக்க வைத்துவிட்டது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.