இயக்குனர் வி.சேகர் காலமானார்!.., திரையுலகினர் இரங்கல்!..
CineReporters Tamil November 15, 2025 05:48 PM

தமிழ் பட இயக்குனர் வி.சேகர் உடல்நிலை குறைவால் சென்னையில் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 1990 ஆம் வருடம் வெளியான நீங்களும் ஹீரோதான் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வி.சேகர்.

தொடர்ந்து குடும்ப திரைப்படங்களை இயக்கினார். விரலுக்கேத்த வீக்கம், காலம் மாறிப்போச்சு, ஒன்னா இருக்க கத்துக்கணும், பொறந்த வீடா புகுந்த வீடா உள்ளிட்ட பல படங்களையும் இயக்கியுள்ளார். விசுவுக்கு பின் பெண்கள் ரசித்துப் பார்க்கும் திரைப்படங்களை எடுத்தார் வி.சேகர். குறைவான பட்ஜெட்டில் ஹிட் படங்களை கொடுத்தார்.

இவரின் படங்களில் வடிவேலு, விவேக், தியாகு, கோவை சரளா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் அதிக படங்களில் நடித்திருக்கிறார்கள். வடிவேலுவை பற்றி யாருக்கும் தெரியாத பல விஷயங்களை இவர் பேட்டிகளில் சொல்லி அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

இவரின் படங்களுக்கென தனி ரசிகர் கூட்டமே இருந்தது. கடந்த 10 நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட வி.சேகர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்தான் சிகிச்சை பலனின்றி தற்போது அவர் மரணமடைந்திருக்கிறார். அவர்களின் மரணத்திற்கு திரையிலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.