Rajini: பி.வாசு To சுந்தர்.சி வரை!.. ரஜினி படத்திலிருந்து வெளியேறிய இயக்குனர்கள்!..
CineReporters Tamil November 15, 2025 07:48 PM

ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை இல்லாத தமிழ் சினிமா இயக்குனர்களே இல்லை. அது நடந்துவிட்டால் சினிமா பயணம் பூர்த்தி அடைந்துவிட்டதாக நினைப்பார்கள். ஆனால், ரஜினியின் புதிய படத்திலிருந்து விலகி இருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க ரஜினி நடிக்கும் படத்திலிருந்து எந்த இயக்குனரும் விலக நினைக்க மாட்டார். ஆனால் சில காரணங்களால் சுந்தர்.சி இந்த முடிவை எடுத்திருக்கிறார். சுந்தர் சி சொன்ன கதை கதையில் ரஜினிக்கு திருப்தி இல்லை என்பதால் சுந்தர்.சி இந்த முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது

அதிலும் ரஜினியிடமும் கமலிடமும் முறையாக தெரிவிக்காமலேயே சுந்தர்.சி இதை அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். சுந்தர்.சி-யின் இந்த செயல் கமலுக்கும் ரஜினிக்குமே அவமானமாக பார்க்கப்படுகிறது. எனவே ரஜினியின் 173 வது படத்தை இயக்க வேறு ஒரு இயக்குனர் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி படத்திலிருந்து ஒரு இயக்குனர் விலகுவது என்பது பல வருடங்களாக நடந்து வருகிறது.

80களிலேயே அது நடந்திருக்க வாய்ப்பிருக்கும் நிலையில் நாம் இதை நாம் 90களில் இருந்து தொடங்கலாம். ஒரு ஆங்கில நாவலை அடிப்படையாகக் கொண்டு ரஜினி ஒரு திரைப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டார். தன்னுடைய பேவரைட் இயக்குனர் பி. வாசுவை அழைத்து அந்த படத்தை இயக்க சொன்னார். ஆனால் என்ன காரணமோ வாசு அதிலிருந்து விலகினார். அதன்பின் அந்த படத்தை சுந்தர்.சி இயக்க அதுதான் அருணாச்சலம் படமாக வெளியானது.

தனது குருநாதர் பாலச்சந்திரின் உதவியாளர் என்பதால் வஸந்தை அழைத்து ஒரு படத்தை இயக்க சொன்னார் ரஜினி. ஆனால் கதை பிடிக்காமல் அந்த படத்திலிருந்து வெளியேறினார் வஸ்ந்த். அதன்பின் சுரேஷ் கிருஷ்ணா அந்த படத்தை இயக்கினார். அதுதான் ரஜினி ரசிகளால் இப்போதும் கொண்டாடப்படும் பாட்ஷா.

பாட்ஷா படத்திற்கு பின் பல வருடங்கள் இது தொடரவில்லை. அதன்பின் துல்கர் சல்மானை வைத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியை அழைத்து ‘எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க’ என ரஜினி  சொன்னார். தீவிர ரஜினி ரசிகரான தேசிய பெரியசாமி ‘தலைவரே சொல்லிவிட்டார்’ என ஒரு சரித்திர கதையை உருவாக்கினார். சில மாதங்கள் வேலைகள் நடந்தது. ஆனால் பெரிய பட்ஜெட் சரித்திர கதை என்பதால் இதை தேசிங்கு பெரியசாமி ஹேண்டில் செய்வாரா என்கிற சந்தேகத்தில் அதில் நடிக்க மறுத்து விடடார் ரஜினி. அந்த கதையில்தான் சிம்பு நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தியை அழைத்து ‘எனக்கு ஏதேனும் லைன் இருக்கா?’ என கேட்டார் ரஜினி. ‘இரண்டாவது படமே ரஜினி படமா?’ என அவரும் ஒரு கதையை உருவாக்கினார். ஆனால் அவர் மீதும் நம்பிக்கை இல்லாமல் அவரை அனுப்பிவிட்டார் ரஜினி.
தற்போது ரஜினி படத்திலிருந்து விலகி இருக்கிறார் சுந்தர்.சி.


இப்படி ரஜினி படத்திலிருந்து விலகிய இயக்குனர்கள் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.