செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, வான்வெளியில் பறந்துகொண்டிருந்த சிறிய ரக பயிற்சி விமானம் (Small Trainer Aircraft) ஒன்று திடீரெனப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறி கீழே விழுந்து நொறுங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தின்போது, விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் உடனடியாகப் பாரசூட் (Parachute) மூலம் கீழே குதித்துச் சாமர்த்தியமாக உயிர்தப்பினர். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வெடித்துச் சிதறிய அந்தச் சிறிய ரக விமானம் பயிற்சிப் பறத்தலில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. விமானம் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.