IND vs SA: கலக்கிய ஜடேஜா- குல்தீப் கூட்டணி.. 97 ரன்களில் தடுமாறும் தென்னாப்பிரிக்கா!
TV9 Tamil News November 15, 2025 10:48 PM

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான (India vs South Africa 1st Test) முதல் டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், தென்னாப்பிரிக்கா அணி 2வது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம், தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 63 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் டெம்பா பவுமா 29 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இன்றைய இரண்டாம் நாளில் மொத்தம் 15 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இதன் காரணமாக இந்தப் போட்டியின் முடிவு மூன்றாவது நாளில், அதாவது நாளை அதாவது 2025 நவம்பர் 16ம் தேதி தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) தனது சுழற்பந்து வீச்சால் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்களை திணற செய்தார்.

ALSO READ: 32 பந்துகளில் அதிரடி சதம்… 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனை!

2வது நாளில் நடந்தது என்ன..?

That will be Stumps on Day 2⃣! 🙌

4⃣ wickets for Ravindra Jadeja
2⃣ wickets for Kuldeep Yadav
1⃣ wicket for Axar Patel

An impressive show from #TeamIndia bowlers in the 2️⃣nd innings 👏

Scorecard ▶️ https://t.co/okTBo3qxVH #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/kHVZ8PP99R

— BCCI (@BCCI)


இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்பிற்கு 37 என்ற ரன்களுடன் தொடங்கினர். ஜெய்ஸ்வால் ஆட்டமிழப்பிற்கு பிறகு, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50க்கு மேற்பட்ட ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கே.எல். ராகுல் 39 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 29 ரன்களும் ஆட்டமிழந்தனர். உள்ளே வந்த இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும் 3 பந்துகளில் 4 ரன்களை குவித்து கழுத்து வலி காரணமாக வெளியேறினார். இதன் பிறகு களமிறங்கிய ரிஷப் பண்ட் நல்ல தொடக்கத்தை தந்தாலும் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனுடன் ரவீந்திர ஜடேஜாவும் 27 ரன்களை விளாசினார்.

ஷுப்மான் கில் ரிட்டயர்ட் ஹர்ட்:

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில், கேப்டன் சுப்மன் கில் ஸ்வீப் ஷாட் விளையாடும்போது கழுத்தில் வலி ஏற்பட்டது. கில் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த பிறகு ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். இதையடுத்து சுப்மன்கில் தற்போது மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் இருப்பதாகவும், அவரது உடல்நிலையைப் பொறுத்து மேலும் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் பிசிசிஐ ஒரு அறிக்கையை வெளியிட்டது. மேலும், அக்சர் படேல் 16 ரன்களும், துருவ் ஜூரெல் 14 ரன்களும் எடுத்தனர்.

ALSO READ: 3 பந்துகளை மட்டுமே சந்தித்த கில்.. பாதியில் வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி.. காரணம் என்ன?

கலக்கிய ஜடேஜா-குல்தீப் ஜோடி:

இரண்டாவது இன்னிங்ஸில், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவின் சுழற்பந்து வீச்சு தென்னாப்பிரிக்க பேட்டிங் வரிசையை சீர்குலைத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா மொத்தம் ஏழு விக்கெட்டுகளை இழந்தது, இவை அனைத்தையும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தினர். அதில், அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேலும் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.