திடீர் திருப்பம்…! “வலுப்பெறும் எடப்பாடியார் அணி…” ஃபார்வர்டு பிளாக் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!!
SeithiSolai Tamil November 15, 2025 10:48 PM

தமிழகத்தில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணியில் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி இணைவதாக இன்று (நவம்பர் 15) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அக்கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது எனத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கூர்வாட் பிளாக் கட்சியின் நிர்வாகிகள், கட்சியின் மாநிலத் தலைவர் கதிரவன் தலைமையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினர்.

அப்போது, எடப்பாடி பழனிசாமிக்குச் சால்வை அணிவித்து, பூங்கொத்துக் கொடுத்துத் தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர். இதன் மூலம், அதிமுகவின் கூட்டணிப் பட்டியல் தற்போது விரிவடையத் தொடங்கியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.