தூத்துக்குடியில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடியில் கடந்த 2023ம் ஆண்டு தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் முருகன் (45/2023) என்பவரை முன்விரோதம் காரணமாக மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்களான இசக்கிமுத்து மகன் கருப்பசாமி (எ) கருப்பன் (29/2025), சுப்பையா மகன் ராஜசேகர் (எ) ராஜா (35/2025), (மற்றொரு) இசக்கிமுத்து மகன் கணேசன் (42/2025, கணேசனின் மகன் முத்துசெல்வம் (23/2025) ஆகியோர் சேர்ந்து கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் வடபாகம் காவல் நிலைய போலீசார் மேற்படி 4பேரையும் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி பிரீத்தா இன்று (14.11.2025) மேற்படி எதிரிகள் கருப்பசாமி (எ) கருப்பன், ராஜசேகர் (எ) ராஜா, கணேசன் மற்றும் கணேசனின் மகன் முத்துசெல்வம் ஆகிய நான்கு எதிரிகளுக்கு தலா ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூபாய் 5,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் சிலம்பரசன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 25 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?