பீகார் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.
இதில் தேசிய ஜனநாயக கட்சி 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.
ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மோசமான தோல்வியை சந்தித்தது.
பிரசாந்த் கிஷோர் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.
இந்நிலையில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி,
சந்தேஷ் தொகுதியில் 27 வாக்குகள் வித்தியாசத்தில் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் தோல்வியை தழுவியுள்ளார்.
இதேபோல் அகியான்(AGIAON) தொகுதியில் 95 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்று உள்ளார்.