தேர்வு கிடையாது..! சத்துணவு மையத்தில் வேலைவாய்ப்பு!
Top Tamil News November 15, 2025 10:48 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு அரசு சத்துணவு துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 04
பணியிடம் திருப்பத்தூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 11.11.2025
கடைசி தேதி 25.11.2025

பதவி: சமையல் உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.3,000 – 9,000/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி/ தோல்வி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் (SC) – 21 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

பழங்குடியினர் – 18 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் – 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.11.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://tirupathur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.