பிகார் சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில், ராஷ்டீரிய ஜனதா தள தலைவரும், இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், தாம் போட்டியிடும் குடும்ப கோட்டையான இராகோபூர் தொகுதியில் கடுமையான போட்டியை சந்தித்து வருகிறார்.
ஆரம்பத்தில் இரண்டு சுற்றுகளுக்கு பின்னடைவில் இருந்த தேஜஸ்வி யாதவ், 4-வது சுற்றில் பாஜக வேட்பாளர் சதீஷ் குமாரைவிட 3,000 வாக்குகள் பின்தங்கி இருந்தார். ஆனால் சற்றுமுன் அவர் வெறும் 585 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார்.
பீகார் தேர்தல் முன்னிலை நிலவரம்:
தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA): 199 தொகுதிகளில் முன்னிலை.
இந்தியா கூட்டணி: 38 தொகுதிகளில் முன்னிலை.
Edited by Mahendran