19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் டிசம்பர்16-ஆம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ளது. ஐ.பி.எல் அணிகள் தங்கள் தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை இன்று (நவம்பர் 15) 10 அணிகளும், ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்து வருகிறது.
18 வருட ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து அதிர்ச்சி தோல்வி கண்டது. ஆனால், கடந்த 18 வருடங்களாக ஒரு ஐ.பி.எல் கோப்பைக்கான பெங்களூரு அணி தவமாய் தவமிருந்தது. அதன்படி, இந்த வருடம் நடைபெற்ற 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் வென்றது.

இந்த நிலையில் பெங்களூரு அணி விடுவிக்கும் வீரர்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது . அதன்படி 04 வீரர்களை விடுவிக்க பெங்களூரு அணி திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு அணி 04 வீரர்களை விடுவிக்க திட்டமிட்டுள்ள வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:
01-மயங்க் அகர்வால்
02- லியாம் லிவிங்ஸ்டோன்
03-பிளெஸ்ஸிங் முசரபனி
04- ராசிக் தர்