வாட்ஸ்-அப்பிற்கு போட்டி கொடுக்கும் வகையில் சாட்டிங் வசதியும் எக்ஸ் தளத்தில் அறிமுகமாகியுள்ளது. ஆடியோ, வீடியோ கால் வசதிகளுடன் இந்த சாட்டிங் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில், எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் மற்றும் ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாத வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் இந்த புதிய சாட்டிங் வசதி அறிமுகமாகியுள்ளது.
தற்போது ஆப்பிள் ஐஓஎஸ் (iOS) சாதனங்களில் மட்டும் இந்த வசதி கிடைக்கிறது. விரைவில் ஆண்ட்ராய்டு போன்களிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.