அடக்கடவுளே… 24 வயதில் மேடையில் பேச்சு… சட்டென சரிந்து விழுந்த இளம் பெண்! – பதைபதைக்கும் சம்பவம்! வைரலாகும் சிசிடிவி காட்சி..!!
SeithiSolai Tamil November 19, 2025 06:48 AM

குஜராத் மாநிலம் சூரத்தின் கபோத்ரா பகுதியில் உள்ள தாருக்காவாலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அஹமதாபாத்தை சேர்ந்த ஜீல் தாக்கர் (24) என்ற இளம் பெண் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, திடீரென மயங்கிச் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில்(IT ) பணிபுரிந்து வந்த இவர், கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு அஹமதாபாத்தில் இருந்து சூரத் வந்திருந்தார். மேடையில் மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சட்டெனப் பின்னால் சரிந்து விழுந்ததைக் கண்ட அங்கிருந்தவர்கள், உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

“>

 

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாரடைப்பு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுவதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்; எனினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.