சமையல் எரிவாயு விலையில் மாற்றமா? அமெரிக்கா-இந்தியா LPG ஒப்பந்த பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது..!
Seithipunal Tamil November 19, 2025 07:48 AM

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த வர்த்தக அழுத்தம் தீவிரமானது. இந்தியப் பொருட்களுக்குப் 25% இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதோடு, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக இந்தியா அறிவித்த பின்னர் மேலும் 25% சேர்த்து மொத்தம் 50% வரியாக உயர்த்தப்பட்டது.

இந்த கூர்மையான வரிச்சுமையைத் தளர்த்த தொடர்ந்து இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் நேரடி மோதலாக ஈடுபட்டு வருகின்றன.இந்த சூழலில், இந்தியா–அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதற் கட்ட பேச்சுவார்த்தை நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு விரிவான ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும், வர்த்தகத்துறைச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில்,“முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் தீர்வின் வாசலில் உள்ளது. இதன் மூலம் 50% வரிவிதிப்பு பிரச்சினைக்கு தெளிவான தீர்வு கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம்.”மேலும், 2026 முதல் அமெரிக்காவில் இருந்து சமையல் எரிவாயு (LPG) இறக்குமதி செய்வதற்காக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.

இதுகுறித்து அவர் மேலும் விளக்குகையில்,“இது நீண்டகாலமாக பேசப்பட்ட தனி முன்கூட்டிய ஒப்பந்தம். இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் பகுதியாக இல்லாவிட்டாலும், இருநாடுகளின் வர்த்தக சமநிலையை நிலைநிறுத்த நாம் மேற்கொண்டுள்ள முக்கிய நடைமுறைகளில் இதுவும் ஒன்று.”

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.