நாய் குறுக்கே வந்ததில் நடுரோட்டில் விழுந்த கணவன், மனைவி... பேருந்து மோதி பலியான சோகம்!
Dinamaalai November 19, 2025 12:48 PM

மதுரை சிக்கந்தர் சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த கணவன், மனைவி, திடீரென நாய் குறுக்கே வந்ததில் நடுரோட்டில் கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்துக் கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயங்களுடன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனைவியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

மதுரை ஜீவா நகரைச் சேர்ந்த வெங்கடசுப்பு–பத்மாவதி தம்பதியினர் அலங்காநல்லூர் நோக்கி நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர். இவர்களது இருசக்கர வாகனத்தில் காமாட்சி அம்மன் நகர்ப் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென சாலையின் குறுக்கே ஓடிய நாய் மீது வாகனம் மோதி, இருவரும் கீழே விழுந்தனர்.

அந்த நேரத்தில் பின்னால் வந்த அரசுப் பேருந்து இருவர் மீதும் அதிவேகத்தில் மோதியது. இதில் வெங்கடசுப்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவர் உடல் பேருந்து சக்கரத்தில் சிக்கி நசுங்கியது. மனைவி பத்மாவதி தலையில் படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைப் பலனின்றி பத்மாவதியும் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் மோதிய நாயும் இறந்தது. இந்த விபத்து குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலைகளில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தாலும், மதுரை மாவட்டத்தில் இந்த நடவடிக்கை சரிவர நடைமுறைப்படப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் இந்த பகுதியில் இத்தகைய விபத்துகள் அடிக்கடி நடைபெறுகின்றன என்று கூறுகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.