இதே பள்ளிப்பட்டு பகுதியில் கடந்தாண்டு கழிவு நீர் கலந்த குடிநீரால் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அதன்பின் கடந்த மாதம் 10 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதேபோல மீண்டுமொரு சம்பவம் தலைதூக்கியிருப்பது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியையே தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்துகிறது.
கடந்த வருடம் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம், சில மாதங்களுக்கு முன் திருச்சி மாவட்டம் உறையூர் என மாவட்ட வித்தியாசமின்றித் தொடர்ந்து தமிழகத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்து, அப்பாவி உயிர்கள் பலியாகி வரும் நிலையில், சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு எனும் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
சுகாதாரமான குடிநீரைக் கூட வழங்க இயலாத நிர்வாகத் திறனற்ற ஆட்சியை நடத்திக் கொண்டு, நாடு போற்றும் நல்லாட்சி என வெற்றுப் பெருமை பேசுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாணிக் குறுக வேண்டும்! இப்படி, அப்பாவிப் பொதுமக்களின் உடல்நலத்தோடும் உயிரோடும் விளையாடும் அறிவாலயத்தின் 'மீண்டுமொரு முறை ஆட்சியைப் பிடிக்கும் கனவு' கானல் நீராகவே ஆகும்! என்று தெரிவித்துள்ளார்.