மெக்சிகோவில் 22 வயதான ரெபேக்கா பார்க் என்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், கார்ட்னி பார்த்தலோமியோ (40) மற்றும் அவரது வளர்ப்புத் தந்தையான பிராட்லி பார்த்தலோமியோ (47) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரெபேக்கா பார்க் காணாமல் போனதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது அவரது உடல் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. ஆனால், வயிற்றில் இருந்து அறுக்கப்பட்ட குழந்தையின் உடல் இன்னும் கிடைக்கவில்லை.
இந்தச் சம்பவத்தை அடுத்து, கொலை, சித்திரவதை, சட்டவிரோத சிறைவைப்பு மற்றும் இறந்த உடலை அகற்றுதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் அந்தத் தம்பதியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, நவம்பர் 3ஆம் தேதி, 38 வார கர்ப்பிணியாக இருந்த ரெபேக்காவைத் தங்கள் வீட்டிற்கு வரவழைத்த பார்த்தலோமியோஸ் தம்பதியினர், அதன் பிறகு அவரை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று, வயிற்றில் இருந்த குழந்தையை வெளியே எடுக்க முயற்சிக்கும்போது சித்திரவதை செய்துள்ளனர்.
இந்த கொடூரச் செயலால் தாயும் சேயும் உயிரிழந்தனர். “இது முற்றிலும் தீமையின் உருவம்” என்று வழக்குத் தொடுப்பாளர் ஜோஹன்னா கேரி கூறினார். குழந்தை பெற்றெடுக்க முடியாததால், தன் அண்ணன் இக்கொலையைச் செய்திருக்கலாம் என்று பிராட்லி பார்த்தலோமியோவின் சகோதரி ஸ்டேசி டேவிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் மெக்சிகோ சமூகத்தை உலுக்கியுள்ளதுடன், நீதிக்காக மக்கள் நீதிமன்றத்தை நிரப்பி வருகின்றனர்.