காட்டில் அபாயகரமான வேட்டைக்காரர்களில் முக்கியமானது ஜாகுவார். அதின் வலிமை, வேகம், இரையை துல்லியமாக தாக்கும் திறன் ஆகியவை அதை மற்ற பெரிய பூனைகளிலிருந்து தனித்துவப்படுத்துகின்றன. மறுபுறம், அனகோண்டா விஷமற்ற பாம்பு என்றாலும், அதன் பிடியிசை வலிமை எந்த மிருகத்தையும் சவாலுக்கு உட்படுத்தும். இவ்விரண்டு சக்திவாய்ந்த உயிரினங்கள் நேருக்கு நேர் மோதினால் என்ன ஆகும்? – இதுதான் சமூக வலைத்தளங்களில் தற்போது பரவிவரும் ஒரு வீடியோவின் மையக்கரு.
ஒரு ஜாகுவார் மற்றும் மஞ்சள் அனகோண்டா இடையேயான கடுமையான போராட்டத்தைப் பதிவு செய்த இந்த வீடியோ காட்டில் நடந்த அரிதான தருணத்தை வெளிப்படுத்துகிறது. புதர்களுக்குள் திடீரென பாய்ந்த ஜாகுவார், அனகோண்டாவைப் பிடித்து இழுத்து வருவதுடன் காட்சி தொடங்குகிறது. பிடிபட்ட பாம்பு பின்வாங்காமல் உடனே எதிர்த்து, ஜாகுவாரின் முகத்தைப் பிடிக்கும் வகையில் தன் உடலைச் சுழற்றி தாக்குகிறது. ஜாகுவாரின் சுறுசுறுப்பு மற்றும் அனகோண்டாவின் வலிமை – இரண்டும் இந்தக் காட்சியில் தெளிவாக தெரிகின்றன.
மலைப்பாம்புகள் போல, அனகோண்டா கூட தன் இரையை வளைத்து கட்டுப்படுத்தும் திறன் உடையது. அதே முறையை ஜாகுவருக்கும் பயன்படுத்த முயன்றது. ஒரு கணம், பாம்பு மேலோங்குவது போல் தோன்றினாலும், ஜாகுவார் வேகமாக தலையை அசைத்து அதன் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்கிறது. பின்னர், சக்திவாய்ந்த தாக்குதலால் பாம்பை அடக்கி, புதர்களுக்குள் இழுத்துச் செல்கிறது.
View this post on Instagram
25 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோ பார்வையாளர்களை இறுதிவரை பதட்டத்தில் வைத்திருக்கிறது. இறுதியில், ஜாகுவார் அனகோண்டாவை வெற்றி கொண்டதும் காட்சி முடிவடைகிறது. அடுத்து என்ன நடந்தது என்பது குறித்து வீடியோ எந்த தகவலும் வழங்கவில்லை.
இந்த அதிர்ச்சிகரமான காட்சியை @jaguars_pantanaltours என்ற பக்கத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இதைப் பார்த்து கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். மேலும் காட்டு உலகின் உண்மை சக்திப் போட்டியை வெளிப்படுத்தும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.