கள்ளக்காதல் தொடர்பான தகராறு துயரமாக முடிந்து, 28 வயதான திருமணமான பெண் தூக்குப்போட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் ராமதுர்கா தாலுகா கோனகனூர் கிராமத்தைச் சேர்ந்த தேமப்பா என்பவரின் மனைவி நாகவ்யா வந்தமுரி (28) சில மாதங்களாக அதே பகுதியைச் சேர்ந்த மெகபூப் சாப் என்பவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இது கள்ளக்காதலாக மாறியதை அறிந்த கணவர் தேமப்பா, மனைவியை கண்டித்ததாகத் தெரிகிறது. இருந்தாலும் நாகவ்யா அந்த உறவை கைவிட விரும்பவில்லை.
பின்னர், நாகவ்யா தனது கள்ளக்காதலன் மெகபூப் சாப்புடன் வீட்டை விட்டு வெளியேறி, ராமதுர்கா பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், மெகபூப் சாப் நாகவ்யாவிடம் மதம் மாறும்படி அழுத்தம் தந்து வந்ததாகவும், அதற்கு இணங்காவிட்டால் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மன உளைச்சலில் இருந்த நாகவ்யா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும் சம்பவம் குறித்து ராமதுர்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயரச் செய்தி அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.