செப்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிச்சா ,எந்த நோயெல்லாம் தாக்காது தெரியுமா ?
Top Tamil News December 08, 2025 09:48 AM

பொதுவாக செப்பு பாத்திரத்தில் அதாவது தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.எனவே இந்த செப்பு பாத்திரத்தால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம் 

1.பொதுவாக செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அதில் பல மருத்தவ குணங்கள்  இருக்கிறது.
2.செப்பு பாத்திரத்தில் உபயோகப்படுத்தினால் தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. 
3.சிலருக்கு தாமிர குறைபாடு இருந்தால் கூட , தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். 
4.செப்பு பாத்திரத்தில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.
5.செப்பு பாத்திரத்தில் அதாவது தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.
6.செப்பு பாத்திரம்  நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க உதவுகிறது. 
7.நமக்கு ஏற்படும் இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.
8.செப்பு பாத்திரத்தில் அதாவது தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. 
9.செப்பு பாத்திரத்தில் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.