ஆஸ்திரேலியாவில் பயங்கரம் - பீச்சில் துடிதுடித்து 10 பேர் பலி
Top Tamil News December 14, 2025 09:48 PM

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பொண்டாய் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

ஆஸ்திரேலியாவின் பாண்டி (Bondi) கடற்கரையில் பரபரப்பான சம்பவம் அரங்கேற்கியுள்ளது. சிட்னி நகரில் உள்ள பிரபலமான பொண்டாய் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். யூத மக்களின் விழாவான 'ஹனுக்கா' கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது இரண்டு நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர். இதனால் பீதியடைந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சிதறி ஓடினர். அப்போது, துணிச்சலான ஒரு நபர் தாக்குபவரை பின்னாலிருந்து தாக்கி, அவரது கையிலிருந்த துப்பாக்கியைப் பறித்தார். இந்த வீர செயல் மேலும் உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில் இந்த தாக்குதல் ஹனுக்கா எனப்படும் யூதர்களின் நிகழ்வை இலக்கு வைத்து நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. தாக்குதல் தொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். யூதர்களை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.