தமிழ் சினிமாவில் கடந்த 14-ம் தேதி டிசம்பர் மாதம் 2012-ம் ஆண்டு திரைய்ரங்குகளில் வெளியான படம் நீதானே என் பொன்வசந்தம். இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தின் திரைக்கதையை ரேஷ்மா கட்டாலா மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இணைந்து எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஃபோட்டான் கதாஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் எல்ரெட் குமார், ரேஷ்மா கட்டாலா, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் வெங்கட் சோமசுந்தரம் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து இருந்தனர். மேலும் இந்த நீதானே என் பொன்வசந்தம் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் ஜீவா நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை சமந்தா ரூத் பிரபு நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரவி பிரகாஷ்,
சரண் சக்தி, சந்தானம், வித்யுல்லேகா ராமன், ரவி ராகவேந்திரா, ஸ்ரீரஞ்சனி, அனுபமா குமார், கிறிஸ்டின் தம்புசாமி, அபிலாஷ் பாபு, அபிஷேக் ஜெயின், அர்ஜுன் ராஜ்குமார், ராஜ்குமார் பிச்சுமணி, அஸ்வதி ரவிக்குமார், தன்யா பாலகிருஷ்ணா, கவிதா சீனிவாசன், கோட்டா பிரசாந்த், பிரீத்தி ராஜேந்திரன், ராஜேஷ் ட்ராக்கியா, சாகித்யா ஜெகநாதன், ஷ்ரியா சர்மா, ஸ்வேதா சேகர், வைத்தியநாதன், வெற்றி, விவேக் பதக், நானி, VTV கணேஷ், சதீஷ் கிருஷ்ணன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
Also Read… முடிவடைந்தது அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் படத்தின் படப்பிடிப்பு… வைரலாகும் போஸ்ட்
13 ஆண்டுகளை நிறைவு செய்தது நீதானே என் பொன்வசந்தம் படம்:90ஸ் கிட்ஸ்களின் நாஸ்டாலஜியை தூண்டும் படம் என்று நீதானே என் பொன்வசந்தம் படத்தைக் கூறலாம். ரொமாண்டிக் பாணியில் வெளியான இந்தப் படம் காதல்கர்களின் அடையாள சின்னமாக இருந்தது என்று கூறலாம். பள்ளியில் படிப்பதில் இருந்தே காதல் செய்யும் ஜீவா மற்றும் சமந்தா இருவரும் அவர்களின் குடும்ப சூழல் காரணமாக பிரிந்து இருக்க நேர்கிறது. பிரிந்தாலும் தங்களது காதலில் இருந்து அவர்கள் வெளியே வரமுடியாமல் தவிர்க்க முடியாமல் இருக்கும் நிலையில் அவர்கள் இறுதியில் இணைந்தார்களா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
Also Read… பிக்பாஸில் வீட்டுதலையா அமித் பார்கவ் என்ன செய்தார் – அடுக்கடுக்காக புகார்களை வைக்கும் போட்டியாளர்கள்