டிசம்பர் 18ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டம் ஈரோட்டில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் கலந்துகொள்ள உள்ளார். சில நிபந்தனைகளுடன் காவல்துறை இந்த கூட்டத்திற்கு அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது இந்த கூட்டம் 2 மணி நேரம் மட்டுமே நடைபெற வேண்டும் என்று காவல்துறை முக்கிய நிபந்தனை விதித்துள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 18ஆம் தேதி விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை காவல்துறை அனுமதி வழங்கி உள்ளதாக நேற்று தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.
இந்த நேரத்திற்குள் நிகழ்ச்சியை நடத்த அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், 16ஆம் தேதி மாலைக்குள் இந்த நிகழ்ச்சிக்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிடும் என்றும், காவல்துறை அனுமதி மற்றும் ஒத்துழைப்போடு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி காட்டுவோம் என்றும் செங்கோட்டையன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Edited by Siva