மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!
Webdunia Tamil December 16, 2025 01:48 PM

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. நேற்று திடீரென ஒரு லட்சத்தை தாண்டி உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்து 99 ஆயிரத்துக்கும் குறைவாக விற்பனையாகி வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.165-ம், ஒரு சவரனுக்கு ரூ.1,320-ம் குறைந்துள்ளது.

தங்கம் விலை போலவே வெள்ளி விலையும் இன்று ஒரு கிலோவுக்கு ரூ.4,000 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை இப்போது பார்ப்போம்.

சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 12,515

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 12,350

சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 100,120

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 98,800

சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 13,653

சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 13,473

சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 109,224

சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 107,784

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 211.00

சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 211,000.00

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.