“15 மாதங்களில் இல்லாத சரிவு!”… தொழிற்சாலை உற்பத்தி, ரியல் எஸ்டேட், கார் விற்பனை சுருக்கம்.. அதிர்ச்சியில் சீன அரசாங்கம்..!!!!
SeithiSolai Tamil December 15, 2025 09:48 PM

சீனாவின் பொருளாதாரம் கடந்த சில மாதங்களாக எதிர்பாராதப் பொருளாதாரச் சிக்கலில் சிக்கியுள்ளது. நாட்டின் இரண்டு முக்கியத் துறைகளான தொழிற்சாலை உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை என இரண்டிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலை உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு வெறும் 4.8% மட்டுமே வளர்ந்துள்ளது (நிபுணர் எதிர்பார்த்த 5.0% ஐ விடக் குறைவு). இது கடந்த 15 மாதங்களில் இல்லாத மிகக் குறைந்த வளர்ச்சி ஆகும். சில்லறை விற்பனை (நுகர்வோர் வாங்குவது) 1.3% மட்டுமே உயர்ந்துள்ளது, இது டிசம்பர் 2022க்குப் பிறகு மிகவும் பலவீனமானச் சரிவு ஆகும்.

நிலையானச் சொத்து முதலீடு (Fixed Asset Investment) ஜனவரி முதல் நவம்பர் வரை 2.6% சரிந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், சொத்து முதலீட்டில் ஏற்பட்ட 15.9% வீழ்ச்சி மற்றும் ரியல் எஸ்டேட் துறைப் பாதிப்பு ஆகும்.

நுகர்வோரின் நம்பிக்கை மிகக் குறைவாக இருப்பதால், அரசாங்கம் மேலும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றுப் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், 1 டிரில்லியன் டாலர் வர்த்தக உபரியால், பல நாடுகள் சீன இறக்குமதிகளுக்கு எதிராகத் தடை மற்றும் அதிக வரிகளை விதிப்பதும் சீனாவின் ஏற்றுமதியைப் பெரிதும் பாதித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.