தங்கம் விலை மீண்டும் உயர்வு... வரலாறு காணாத புதிய உச்சத்தில் வெள்ளி விலை!
Dinamaalai December 17, 2025 03:48 PM

சமீப நாட்களாக உச்சத்தில் இருந்து வந்த தங்கம் விலை நேற்று (டிசம்பர் 16) சற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதே சமயம் வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி, நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.50ம், சவரனுக்கு ரூ.400ம் உயர்ந்துள்ளது.ஒரு கிராம் ரூ.12,400 ஒரு சவரன் (8 கிராம்) ரூ. 99,200 என விற்பனையாகி வருகிறது. கடந்த டிசம்பர் 12ம் தேதி முதல் தங்கம் விலை தாறுமாறான ஏற்றம் கண்டது. டிசம்பர் 15-ம் தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்கப்பட்டு, தங்கம் இமாலய உச்சத்தைத் தொட்டது. இந்த விலை ஏற்றத்திற்குக் காரணமாக அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தது சொல்லப்படுகிறது.

எனினும், நேற்று (டிசம்பர் 16) தங்கம் விலை திடீரென 'அந்தர் பல்டி' அடித்து, ஒரு சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.98,800 என்ற விலைக்கு விற்பனையானது. இதனால் விலை மீண்டும் ரூ.1 லட்சத்துக்குக் கீழ் வந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.99,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையைப் போலவே, வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இன்று வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.11 ஆயிரமும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.222 ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 22 ஆயிரம் வெள்ளி விலை. நேற்று முன்தினம் ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று ரூ.4,000 குறைந்து ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்துக்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)நாள்ஒரு சவரன் விலை17.12.2025 (இன்று)ரூ. 99,200

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.