சென்னையில் பாமக கட்சியின் சார்பில் சாதி வாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு முன்னதாக அதிமுக, தவெக, பாஜக, அமமுக பல்வேறு கட்சிகளுக்கும் பாமக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது நடைபெறும் போராட்டத்தில் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.
இந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர், தேமுதிக மற்றும் பாஜக கட்சிகள் கலந்து கொண்டுள்ள நிலையில் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் கலந்து கொள்ளாதது பரபரப்பாக போற்றப்படுகிறது. மேலும் 2026 தேர்தலில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் இவ்விரு காட்சிகளும் பாமக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டும் கலந்து கொள்ளாததால் பல்வேறு வியூகங்களை கிளப்பியுள்ளது.