சந்தையில் விற்பனை செய்யப்படும் முட்டைகளில் புற்றுநோயை உண்டாக்கும் 'நைட்ரோபியூரான்' உள்ளிட்ட தடை செய்யப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகள் உள்ளனவா என்பது குறித்து நாடு முழுவதும் ஆய்வு நடத்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த பிரபல 'எகோஸ்' நிறுவன முட்டையில் தடை செய்யப்பட்ட மருந்து இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ இந்த அதிரடி நடவடிக்கைக்கு காரணமாக அமைந்தது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள எகோஸ் நிறுவனம், தங்களது பண்ணைகளில் ஆன்டிபயாடிக்குகளை பயன்படுத்துவதில்லை என்றும், சமூக வலைதளங்களில் குறிப்பிடப்படும் வேதிப்பொருளின் அளவு FSSAI அனுமதித்த வரம்பிற்குள்ளேயே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், இது மண் அல்லது நீர் மூலமாக ஏற்பட்ட சுற்றுப்புற மாசாக இருக்கலாம் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நிறுவன முட்டை மாதிரிகளையும் பரிசோதித்து அறிக்கை அளிக்க மண்டல அலுவலகங்களுக்கு FSSAI ஆணையிட்டுள்ளது.
Edited by Mahendran