மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை "வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு திட்டம்" என மாற்ற மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதா குறித்து மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
காந்தியாரின் பெயரை காக்கவோ அல்லது மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை என்றும், அவரது பெருமை பெயருக்கு அப்பாற்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
பெயர் மாற்றத்தை விட, இந்த புதிய மாற்றங்களால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச்சுமை மற்றும் ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் குறைவது குறித்தே நாம் கவலைப்பட வேண்டும் என கமல் வலியுறுத்தினார்.
அரசியலுக்காக பெயர்களை மாற்றி கொண்டிருப்பதை விடுத்து, மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்று அவர் கூறினார்.
மக்களுக்குச் சேர வேண்டிய நிதி உதவி பாதிக்கப்பட கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என்று தனது பேட்டியில் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
Edited by Mahendran