உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில், மோஹித் கரே என்ற காசாளர் வாடிக்கையாளர் கொடுத்த பணக்கட்டிலிருந்து சாமர்த்தியமாகச் சில நோட்டுகளைத் திருடியுள்ளார்.
பின்னர், பணக்கட்டில் பணம் குறைவாக இருப்பதாக வாடிக்கையாளரிடம் கூறி ஏமாற்ற முயன்றுள்ளார். ஆனால், அங்கிருந்த CCTV கேமராவில் அவர் பணத்தைத் திருடி மறைத்து வைக்கும் காட்சிகள் மிகத் தெளிவாகப் பதிவாகின. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
CCTV ஆதாரத்தின் அடிப்படையில், அந்த ஊழியர் உடனடியாகப் பணி இடைநீக்கம் (Suspend) செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரைப் பணியிலிருந்து முழுமையாக நீக்க (Termination) தலைமை அலுவலகத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.