தமிழகம் முழுவதும் 570 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
Top Tamil News December 19, 2025 10:48 AM

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 19-ந்தேதி (வெள்ளிகிழமை) அன்று 240 பேருந்துகளும், 20-ந்தேதி (சனிக்கிழமை) 255 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மொத்தம் 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாதாவரத்திலிருந்து 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மொத்தம் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகளாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.