ஜூனியர் ஆசிய கோப்பை: இறுதிப் போட்டியில் மோதவுள்ள இந்தியா -பாகிஸ்தான்..!
Seithipunal Tamil December 20, 2025 06:48 AM

ஆண்களுக்கான 12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் 08 அணிகள் பங்கேற்று இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

லீக் சுற்று முடிவில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், முதல் அரையிறுதியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 08 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சமிக 42 ரன்கள் எடுத்தார்.

139 என்ற வெறி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 18 ஓவரில் 02 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 139 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.