டிசம்பர் 24-இல் அமெரிக்காவின் 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் பாய்கிறது; இஸ்ரோ தகவல்..!
Seithipunal Tamil December 20, 2025 07:48 AM

வரும் டிசம்பர் 24-ஆம் தேதி காலை 08:54 மணிக்கு அமெரிக்காவின் 'புளூபேர்ட்' செயற்கைக்கோள், விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஏ.எஸ்.டி., நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக, 6,500 கிலோ எடையில், 'புளூபேர்ட்' செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது; இது, தொலைதுார கிராமங்களுக்கு, மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும்வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த செயற்கைக்கோளை, நம் நாட்டின், இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), விண்ணில் செலுத்த உள்ளது. அதனபடி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, டிசம்பர் 24-ஆம் தேதி காலை, 08:54 மணிக்கு, எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது செயற்கைக்கோள் விண்ணில் பாய்வதற்கு ஏவுதளத்தில் தயாராக இருக்கும் புகைப்படத்தை இஸ்ரோ தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, இம்மாதம் 15, 21-ஆம் தேதிகளில், 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.